பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் 09 பேரை காணவில்லை..

tamilsolution_ad_alt

     


✅பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னர் ஒன்பது பேரைக் காணவில்லை என்று லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. துறைமுக குண்டுவெடிப்புக்குப் பின்னர் இன்னும் காணாமல் போனவர்களில் இரண்டு சிரிய நாட்டினரும் உள்ளதாக இராணுவம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


✅பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரத்தை உலுக்கியது.இந்த அனர்த்தத்தில் 192 பேர் உயிரிழந்ததுடன், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


✅அதிகாரப்பூர்வ புள்ளி விபரத் தகவல்களின்படி, 15 பில்லியன் டொலர் சேதத்தையும் இந்த வெடிப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

KUMBUKKANDURA NEWS

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.