கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது 08 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 30 குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் பொலிஸ் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிறப்பிக்கப்பட்டவர் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவினால் அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள்.
முக அங்கீகார பாதுகாப்பு கமராக்கள் அனைத்து கவுண்டர்களிலும் பொருத்தப்படும் வரை, தற்போது அந்த கமராக்கள் பொருத்தப்பட்ட கவுண்டர்களை முடிந்தவரை பயன்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
குற்றவாளிகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Thanks for reading….