இந்தவருடம் ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு யாத்திரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வருகைதந்துள்ளதாக ஹஜ் அமைச்சரகத்தின் செய்தித் தொடா்பாளா் காஸான் அல்-நுவைமி தெரிவித்தாா்.
இந்த ஆண்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் சவூதி அரேபியா பல ஆயிரம் கோடி டொலா் செலவிட்டுள்ளது
இந்த நிலையில் வெப்பம் 44 பாகை செல்சியஸை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. குடையைப் பயன்படுத்த வேண்டும்; அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
தகிக்கும் வெப்பத்தைக் கையாள ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான குளிரூட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையே வெளியே வெப்பத்தில் இருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிழல் தரக்கூடிய பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
நடந்துசெல்லும் பாதைகள் சூட்டைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் ஆளில்லா வானூர்திகளும் பயன்படுத்தப்படும்.
அண்மைய ஆண்டுகளில் அதீத வெப்ப அலை ஹஜ் பயணத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Thanks for reading….