இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, ‘ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில், 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.
ஈரான் தாக்குதலை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியது. டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சக தலைமையக கட்டடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
No comments
Thanks for reading….