குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதை மாநில அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகிலுள்ள மேகனிநகர் என்னும் பகுதியில் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்து எரிந்ததாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
“விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அது எந்த வகையான விமானம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார்.
No comments
Thanks for reading….