"ஈரான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் திட்டம்: இஸ்ரேல்-ஈரான் மோதலின் புதிய கட்டம்?

இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் பாராளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை ஈரான் வெளியுறவு மந்திரி இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆனாலும் பேரழிவு ஆயுதங்களை தெஹ்ரான் தயாரிப்பதை எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் கூறுகையில், ஈரானுக்கு அணு ஆயுதங்களை தயாரிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறினார்
No comments
Thanks for reading….