நாளை (30) விசேட பாராளுமன்ற அமர்வு நாளாக, பாராளுமன்றம் கூடவுள்ளது.
அதன்படி, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11 ஆவது பிரிவின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இவ்வாறு நாளை பாராளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்கமைவான அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் நாளை மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும், பாராளுமன்றம் மீண்டும் ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
🇶🇦✈️🇱🇰 கத்தாரிலிருந்து இலங்கைக்கு எயார் கார்கோ
Best Express Cargo மூலமாக உங்கள் பெட்டிகளை இப்போது சுலபமாகவும் பாதுகாப்பாகவும் அனுப்புங்கள்!
📦 ஒரு கிலோகிராம் QR.8.75
🚚 வீடு வரை டெலிவரி
✅ பாதுகாப்பானது • விரைவானது • நம்பகமானது
🌐 ஆன்லைனில் லைவ் டிராக்கிங் வசதி உள்ளது
📲 வாட்ஸ்அப்: 50874999 | 51064999
🌐 www.bestexpress.qa
இன்று முன்பதிவு செய்யுங்கள் – உங்கள் குடும்பத்தினரை நேரத்தில் மகிழ்விக்குங்கள்!
No comments
Thanks for reading….