ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கடுமையாக பாதித்துள்ளது.
அதன்படி கச்சா எண்ணெயின் விலை இன்றிலிருந்து 9% ஆக அதிகரித்துள்ளது.இவ் அதிகரிப்பானது கடந்த 5 மாதங்களில் பதிவான மிக உயர்ந்த மதிப்பாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 6.29 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து அதன் சமீபத்திய விலை 75.65 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை உலக வர்த்தகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thanks for reading….