இலங்கை வந்தார் பாரத பிரதமர் மோடி

tamilsolution_ad_alt
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். 

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Kumbukkandura News 
Theme images by RBFried. Powered by Blogger.