(கவிதை)மெளனத்தில் கூறும் கதைக்கு மொழியில்லை! அல் - ஹிக்மா எனும் சொல்லிற்கு இலக்கணத்தில் இடமில்லை..!

tamilsolution_ad_alt
 மெளனத்தில் கூறும் கதைக்கு 
மொழியில்லை!
அல் - ஹிக்மா எனும் சொல்லிற்கு 
இலக்கணத்தில் இடமில்லை..!

சற்று தொலைவில் இருந்த என் 
இதயத்தை தட்டி எழுப்பியது 
இக் கல்லூரியின் பெருமை..!

உன்னை சுற்றி மகாவலி கங்கையா?
உன்னை சூழ்ந்து இருப்பது பச்சை 
நிற போர்வையா?
உன் அழகை பாட புலவர்கள் 
தேவையா?

மின்னலைப் பார்த்தால் கண்களால் 
போகுமாம்!
இக் கல்லூரியின் வரலாற்றை 
பார்த்தால் பல இதயங்கள் கூடுமாம்..!

என் பாடசாலையை பார்த்தால் 
பல கட்டிடங்கள்!
இப்பாடசாலையை பார்த்தால் 
பல வெற்றிடங்கள்..!

உறையாத ரகசியம் இக் 
கல்லூரியின் பெருமை!
நுகராத மணம் இக் 
கல்லூரியின் மகிமை..!

அம்னா அஸ்வர் 
கும்புக்கந்துரை நியூஸ்

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.