இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை அத்தியவசிய பயணங்கள் தவிர்ந்த ஏனைய பயண நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைய, 200 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளை திறக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதனிடையே, முன்பள்ளி பாடசாலைகளை 50 வீத மாணவர்களுடன் நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மேலும், பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அத்துடன், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிரூட்டப்பட்ட பேருந்துகளை பயன்படுத்த முடியாது எனவும், பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நடைபாதைகள் மற்றும் கடற்கரைகள் என்பன திறக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குப் பின்னர் உணவு விடுதிகளில் ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோருக்கு அனுமதி வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதேவேளை, திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
எனினும், திருமணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும், குறித்த நிகழ்வுக்கு 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குப் பின்னர், திருமண நிகழ்வுகளுக்கு, அதிகபட்சம் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
அத்துடன், நிகழ்வுகள், ஒன்று கூடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மரண சடங்குகளில் கலந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஒரு சந்தர்ப்பத்தில் ஐந்து பேருக்கு மாத்திரமே இருக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த நிலையில், கொவிட் தொற்று பரவும் வீதம் குறைவடையும் பட்சத்தில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் இலகுபடுத்தப்படும் என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments
Thanks for reading….