இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

எமது அரசாங்கத்தில் அநியாய வரிகள் நீக்கப்படும் – அனுர

tamilsolution_ad_alt

 

நாடு இன்று ஏழ்மை நிலையிலிருந்தாலும், நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


வெல்லவாய பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நமது நாடு கடனை மீளச் செலுத்த முடியாத அளவுக்கு ஒரு வறுமையான நாடாக உள்ளது. முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் உப்பினை இறக்குமதி செய்யும் நிலையில் நாடு உள்ளது. எனினும் மஹிந்த, சஷீந்திர, நாமல் மற்றும் ரணில் போன்றவர்கள் செல்வந்தர்களாக உள்ளனர்.


ரணில் ஜனாதிபதியாகும் போது சாகல ஆலோசகராகிறார்.

அவரது சகோதரர் இலங்கை வங்கியின் தலைவராகிறார்.

எனவே ஒருவர் நாட்டை ஆட்சி செய்யும்போது அவரது குடும்பமே பொறுப்புகளை ஏற்கின்றன. 2023 ஆம் ஆண்டு முதல் சுகாதார சேவைக்கு வெற் வரி விதிக்கப்படுகிறது.


ஆகவே எமது அரசாங்கத்தில் வெற் உள்ளிட்ட சகல வரிகளும் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

KBKNEWS MEDIA 

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.