ஜனாதிபதி விருதைப் பெற்றார் Shahmi Shaheedh
பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத் 45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கரையோர வழியாக முழு நாட்டையும் சுற்றி வருவதே இவர் மேற்கொண்டுள்ள சாதனை முயற்சியாகும்.
கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த ஷஹ்மி, இந்த நடைபவனியை காலி வீதியூடாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, கிழக்கிலங்கையின் பொத்துவில், அம்பாறை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை, வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறையை தொடர்ந்து நடை பவனியாகவே பயணித்து மீண்டும் பேருவளையை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார்.
Congratulations
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….