முட்டை விலை குறைப்பு தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
முட்டை விலை குறைக்கப்பட்டதால், முட்டை பயன்படுத்தும் உணவுகளின் விலையையும் குறைக்குமாறு அறிவித்துள்ளது.
முட்டையின் விலை குறைவுடன் ஒப்பிடும்போது முட்டை தொடர்பான பொருட்களின் விலையும் குறைய வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உட்பட ஹோட்டல் உரிமையாளர்கள் அவதானம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விற்பனை செய்யப்படும் முட்டை தொடர்பான பொருட்களின் விலையை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாத வர்த்தகர்களை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.
No comments
Thanks for reading….