கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் 80% க்கும் அதிகமான தபால் மூல வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2024 ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில், 712,319 வாக்காளர்கள் இம்முறை தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி இன்று மூன்றாவது நாளாக தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.
நேற்றும் இன்றும் போன்று முப்படையினர், ஏனைய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தபால் மூல வாக்களிப்பை அடையாளப்படுத்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இன்று வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
அந்த நாட்களில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….