இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
கண்டியில் நடைபெற்ற "ரணிலால் இயலும்" வெற்றிப் பேரணியில் இணைந்து தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அனுஷ விமலவீர உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோரே இவ்வாறு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷ விமலவீர முன்னரே தீர்மானித்திருந்தார்.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன மற்றும் கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சமந்த அருண குமார ஆகியோரைச் சந்தித்து தமது தீர்மானத்தை அனுஷ அப்போது அறிவித்திருந்தார்.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பதாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அனுஷ தெரிவித்திருந்தார்.
No comments
Thanks for reading….