இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் எவ்வாறு அமையும்..?

tamilsolution_ad_alt

 

இன்று (22) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின்போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் வன்முறை சம்பவங்கள் ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் சூனியமாக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


மேலும், அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடளாவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


வாக்கு உங்கள் உரிமை, அதனை நாட்டு மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.


தேர்தல் காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துமாறு அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு அவசர நிலைமையின் போதும் அழைப்பதற்காக முப்படையினரும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


KBKNEWS MEDIA 

No comments

Thanks for reading….

Theme images by RBFried. Powered by Blogger.