ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை CID யிடம் கையளிக்க ஜனாதிபதிக்கு 6 மாதங்கள் எடுத்துள்ளது

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சி ஐ டி யிடம் கையளிக்க ஜனாதிபதிக்கு 6 மாதங்கள் எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு தரப்பட்ட தரப்புகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி இன்று ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாளை உயிர்த்த ஞாயிறு நினைவு நாள் நிகழ்வு இடம்பெற உள்ள நிலையில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஐ டி யிடம் கையளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிய ஜனாதிபதிக்கு அக்கறை இருந்திருந்தால் பதவியேற்ற அடுத்த நாளே ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சி ஐ டி யிடம் கையளித்திருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஆறு மாதங்கள் நித்திரையில் இருந்த ஜனதிபதி நாளை ஈஸடர் நினைவு தினம் அனுஶ்டிக்கப்படுவதையிட்டு விழித்துக்கொண்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
No comments
Thanks for reading….