அவுஸ்திரேலிய தொழிலதிபர் ப்ரையன் ஷாடிக்கிற்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா உள்ளூர் நிறுவன பங்குகளை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளது
அதன்படி, உதய கம்மன்பில சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இனோகா பெரேரா, தனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.
அதனடிப்படையில், முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன, உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments
Thanks for reading….