வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments
Thanks for reading….