கண்டி, ரட்டேமுல்ல பகுதியில் 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு, நேற்று மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடுவதற்காக ஒன்று கூடியிருந்தது.
பின்னர் மூடுபனி மற்றும் மழை காரணமாக, அவர்களால் திரும்பி வருவதற்கு பாதையைக் கண்டறிய முடியாமல் வழி தவறியிருந்தனர்.
இதைப் பற்றி பெற்றோருக்கு அறிவித்த பின்னர், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்கள் உட்பட குழுவினரைக் கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thanks for reading….