இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இரட்டைச் சதத்தை தவறவிட்ட பெத்தும்!

tamilsolution_ad_alt


 பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்று (19) மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 368 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 


அதன்படி, பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸ் மொத்தமான 495 ஓட்டங்களை விட இலங்கை அணி 127 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. 


இன்றைய நாள் ஆட்ட முடிவில், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிவரும் கமிந்து மெந்திஸ் 37 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 


தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸை விளையாடிய பெத்தும், இரட்டைச் சதத்திற்கு 13 ஓட்டங்கள் மீதமிருந்த போது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 


256 பந்துகளில் 187 ஓட்டங்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதில் ஒரு ஆறு ஓட்டமும் மற்றும் 23 நான்கு ஓட்டங்களும் அடங்கும். 


இதற்கு முன்பு, இங்கிலாந்துக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெத்தும் தனது அதிகபட்ச இன்னிங்ஸாக ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 


இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும், தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய எஞ்சலோ மெத்தியூஸ் 39 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.